திருக்கணித பஞ்சாங்கம்
home முகப்பு today தின காலண்டர் calendar_month மாத காலண்டர்
செவ்வாய் தோஷம் கணிப்பான் | Sevvai Dosham Calculator in Tamil

செவ்வாய் தோஷம் கணிப்பான்

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்றும் தோஷ நிவர்த்தி உள்ளதா என்பதை துல்லியமாக அறியலாம்

ஜாதகர் விவரங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய தோஷங்களில் இது முதன்மையானது.

தோஷத்தின் பாதிப்புகள் என்ன?

  • 2-ஆம் இடம்: இது குடும்ப ஸ்தானம். இங்கு செவ்வாய் இருந்தால் குடும்பத்தில் கோபம், வாக்குவாதங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் ஏற்படலாம்.
  • 4-ஆம் இடம்: இது சுக ஸ்தானம். இங்கு செவ்வாய் அமைவது திருமண வாழ்வில் மகிழ்ச்சிக் குறைபாட்டை அல்லது வண்டி வாகனங்களால் பிரச்சனைகளை உருவாக்கலாம்.
  • 7-ஆம் இடம்: இது களத்திர ஸ்தானம் (வாழ்க்கைத் துணை). இங்கு செவ்வாய் இருப்பது கடுமையான களத்திர தோஷமாகும். இது கணவன்-மனைவி இடையே பிரிவினையை உருவாக்கலாம்.
  • 8-ஆம் இடம்: இது மாங்கல்ய மற்றும் ஆயுள் ஸ்தானம். மாங்கல்ய பலத்தைக் குறைக்கலாம்.
  • 12-ஆம் இடம்: இது அயன சயன போக ஸ்தானம். இங்கு செவ்வாய் இருப்பது தாம்பத்திய வாழ்வில் திருப்தியின்மையை ஏற்படுத்தலாம்.

செவ்வாய் தோஷத்திற்கு விதிகள் மற்றும் நிவர்த்தி

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்தாலும், ஜோதிட சாஸ்திரம் அதற்கெனப் பல விதிவிலக்குகளையும் (நிவர்த்தி) அளித்துள்ளது:

  • செவ்வாயை குரு பார்த்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
  • செவ்வாய் கடகத்தில், விருச்சிகத்தில், மேஷத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
  • மேஷ லக்னம், கடக லக்னம், விருச்சிக லக்னம், சிம்ம லக்னம், தனுசு லக்னம், மீன லக்னம் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
  • செவ்வாய் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீன ராசிகளில் இருந்தால் பரிகார செவ்வாய்.
  • செவ்வாய் சந்திரனின் பார்வையில் இருந்தால், செவ்வாய் சனியின் பார்வையில் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
  • செவ்வாயும் குருவும் இணைந்திருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
  • செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவார். அந்த வகையில் மகர லக்னம் அல்லது மகர ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் யாரைத் திருமணம் செய்யலாம்?

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அதே போல தோஷம் உள்ள ஜாதகரைத் திருமணம் செய்வதே மிகச் சிறந்த தோஷ சாமியமாகும். இதன் மூலம் தோஷம் சமனடைந்து நல்வாழ்வு அமையும். நிவர்த்தி பெற்ற செவ்வாய் தோஷகாரர்கள் சாதாரண ஜாதகரைத் திருமணம் செய்யலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

மகர ராசியில் செவ்வாய் இருந்தால் தோஷமா?

இல்லை. செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவார். எனவே மகர லக்னம் அல்லது மகர ராசியில் செவ்வாய் அமைந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்.

செவ்வாயை குரு பார்த்தால் என்ன நடக்கும்?

குருவின் பார்வைக்குக் கோடி நன்மைகள் உண்டு. செவ்வாயின் உக்கிரத்தை குரு பகவான் தனது சுபப் பார்வையால் தணித்துவிடுவார். எனவே செவ்வாயை குரு பார்த்தால் செவ்வாய் தோஷம் முற்றிலுமாக நிவர்த்தி அடையும்.