திருக்கணித பஞ்சாங்கம்
home முகப்பு today தின காலண்டர் calendar_month மாத காலண்டர்
விஜய முகூர்த்தம் நேரம் | Vijaya Muhurtham Timings in Tamil

விஜய & அபிஜித் முகூர்த்தம்

சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும் சக்திவாய்ந்த தினசரி முகூர்த்த நேரங்கள்

ஊர் (City) *
தேதி *
24-08-2026 | சென்னை
விஜய முகூர்த்தம்
"விஜயம்" என்றால் வெற்றி! எந்த ஒரு புதிய தொடக்கத்திற்கும், வழக்குகளில் வெல்லவும் மிகச் சிறந்த நேரம்.
தொடக்கம் 02:47 PM
முடிவு 03:37 PM
கவனிக்க: இதில் குளிகை குறுக்கிடுகிறது! (சுப காரியங்கள் வளரும். ஆனால் கடன் வாங்கவோ/அடைக்கவோ கூடாது)
அபிஜித் முகூர்த்தம்
பிரம்ம தேவனின் ஆசீர்வாதம் பெற்ற நேரம். சிறுசிறு தோஷங்களை நீக்கி காரிய சித்தியைத் தரும் மதிய நேரம்.
தொடக்கம் 11:46 AM
முடிவு 12:36 PM
எச்சரிக்கை: இதில் எமகண்டம் குறுக்கிடுகிறது! சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

இன்றைய & நாளைய நல்ல நேரம்

ராகு காலம், எமகண்டம் ஆகியவை குறுக்கிடாத சுத்தமான காலண்டர் நல்ல நேரம் மற்றும் கௌரி நல்ல நேரத்தை அறிய இங்கே செல்லவும்.

சுப முகூர்த்த நாட்கள்

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களுக்கான சிறந்த முகூர்த்த தேதிகளை அறியுங்கள்.

விஜய முகூர்த்தத்தின் ரகசியம் என்ன?

பொதுவாக ஒரு நாளின் சுப நேரங்களைக் கண்டறிய நல்ல நேரம், கௌரி நேரம், ஹோரை போன்ற பல முறைகள் உள்ளன. ஆனால், அவசர காலத்தில் ஒரு நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுக்க முடியாவிட்டால், எவ்வித நட்சத்திரம், திதி பார்க்காமலேயே நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு சக்திவாய்ந்த முகூர்த்தம் தான் விஜய முகூர்த்தம் (Vijaya Muhurtham).

"விஜயம்" என்றால் வெற்றி என்று பொருள். இது தினமும் மதியம் 2.30 மணி அளவில் வரும் சுமார் 48 நிமிட காலகட்டம் ஆகும். மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு வெற்றியைத் தேடித்தர பகவான் கிருஷ்ணர் இந்த விஜய முகூர்த்த நேரத்தையே தேர்ந்தெடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

எந்தெந்த காரியங்களுக்கு இது உகந்தது?

  • புதிய வியாபாரம் மற்றும் தொழிலைத் தொடங்க.
  • சொத்துக்கள் வாங்குதல் மற்றும் பத்திரப் பதிவு செய்தல்.
  • நீதிமன்ற வழக்குகளைத் தாக்கல் செய்ய (வெற்றி கிடைக்க).
  • முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட.
  • எதிரிகளிடம் சமாதானம் பேச மற்றும் தடைபட்ட காரியங்களை மீண்டும் தொடங்க.

விஜய முகூர்த்தம் மற்றும் ராகு காலம்

விஜய முகூர்த்தமோ அல்லது அபிஜித் முகூர்த்தமோ எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அவை ராகு காலம் அல்லது எமகண்ட நேரத்தில் குறுக்கிட்டால் (Cross ஆனால்) அந்த நேரத்தில் சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. (உதாரணமாக, புதன்கிழமை பகல் 12 முதல் 1.30 வரை ராகு காலம் என்பதால், அந்த நேரத்தில் வரும் அபிஜித் முகூர்த்தத்தில் நற்காரியங்கள் செய்யக்கூடாது). எங்களின் இந்தக் கணிப்பான், இதுபோன்று தோஷங்கள் குறுக்கிட்டால் தானாகவே சிவப்பு நிறத்தில் உங்களுக்கு எச்சரிக்கை செய்யும்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

விஜய முகூர்த்தம் ராகு காலம், எமகண்டத்தில் குறுக்கிட்டால் என்ன செய்வது?

விஜய முகூர்த்தமாக இருந்தாலும், அது ராகு காலம் அல்லது எமகண்ட நேரத்தில் குறுக்கிட்டால் அந்த நேரத்தில் சுப காரியங்கள் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எங்கள் கணிப்பான் இதைத் தானாகவே கண்டறிந்து எச்சரிக்கும்.

விஜய முகூர்த்தம் (Vijaya Muhurtham) என்றால் என்ன?

விஜயம் என்றால் 'வெற்றி' என்று பொருள். தினமும் மதியம் 2.30 மணி அளவில் வரும் சுமார் 48 நிமிட காலகட்டம் விஜய முகூர்த்தம் எனப்படும். இந்த நேரத்தில் தொடங்கும் எந்த ஒரு காரியமும் நிச்சயம் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை.

அபிஜித் முகூர்த்தம் (Abhijit Muhurtham) என்பதன் சிறப்பு என்ன?

அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் 12 மணி அளவில் வரும் ஒரு சிறப்பு நேரமாகும். இந்த நேரம் பிரம்ம தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதால், பஞ்சாங்கத்தில் உள்ள பிற சிறு தோஷங்களை நீக்கி காரிய வெற்றியைத் தரக்கூடியது.

தினமும் விஜய முகூர்த்தம் ஒரே நேரத்தில் வருமா?

இல்லை. இது உங்கள் ஊரின் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதால், நாளுக்கு நாள் மற்றும் ஊருக்கு ஊர் சில நிமிடங்கள் மாறுபடும். எங்கள் கணிப்பான் மூலம் உங்களின் துல்லியமான நேரத்தை அறியலாம்.